1. சருவ லோகதிபா நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகரே நமஸ்காரம் !
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம் .
2. திரு அவதாரா, நமஸ்காரம் !
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம் !
தரணியின் மானுடர் உயிர் அடைந்தோங்க
தருவினில் மாண்டோய் நமஸ்காரம் !
3. பரிசுத்த ஆவி நமஸ்காரம் !
பரம சற்குருவே நமஸ்காரம் !
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம் !
4. முத்தொழிலோனே நமஸ்காரம் !
மூன்றில் நின்றோனே நமஸ்காரம் !
கர்த்தாதி கர்த்தா, கருணை சொரூபா,நித்ய திரியேகா, நமஸ்காரம் .
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: ம.தேவமாணிக்கம்