197. சருவ வலிமை கிருபைகள்

கிருபைகள் மிகுந்த சருவேசா

1. சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா!
தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன்-திருவாசா

2. தூயசிந்தை உண்மையில் உனையே, தொழுதேத்த!
தூய ஆவி கொண்டெனை நிரப்பும் - ஜகதீசா!

3. இருதயத்தைச் சிதற விடாமல் ஒருநேராய்
இசைத்தமைத்துப் பரவசமாக்கும் - நசரேயா!

4. அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
அறுபது நூறு முப்பதாய்ப் பெருக - அருளீசா!


ராகம்: சாமா
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: ஜி.சே. வேதநாயகம்