203. சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

சிந்தனையுடன் தேவாலயந்தனில் சேர்வோம்

பல்லவி

சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி
யேகரின் திருத்தாள்[1] போற்றியே களிகூர்வோம்.

அனுபல்லவி

1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர்
செற்றலர்[2] இடித்துமே சிறந்தவாலயம்;-தமின்
மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் - சிந்

2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக்
காலமும் துதிமுழங்கும் கான[3] வாலயம்;-பரி
சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க[4] வாலயம் - சிந்

3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது
தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட்
டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். - சிந்

4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர்
மகிமை ஜோதிமய மாகுமாலயம்;-மெய்ஞ்
ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம். - சிந்


ராகம்: சஹானா
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்

[1] திருப்பாதங்கள்
[2] பகைவர்
[3] சங்கீதம்
[4] உயர்ந்த