சீரடை தருணம் இதறி
பல்லவி
சீர் அடை தருணம் இதறி மனமே;
சிதைவு படும் முனமே
சீர் அடை; தருணம் இதறி, மனமே;
அனுபல்லவி
பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை கணத்தில். - சீர்
சரணங்கள்
1. நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ,-பேதாய்?
நோய் துயர் உறும்இது மேலுல கிற்கிணை பங்கோ?
கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற-(ரீ)
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. - சீர்
2. பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய்?-ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே;
மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி-(ரீ)
மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து. - சீர்
ராகம்: கமாஸ்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்