206. சீர்திரியேக வஸ்தே நமோ நமோ

பல்லவி

சீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ, நமோ!

அனுபல்லவி

பார்படைத்தாளும் நாதா,
பரம சற்பிரசாதா,
நாருறுந் தூயவேதா, நமோ, நமோ, நமோ! - சீர்

சரணங்கள்

1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்
தாங்கி ஆதரிப்போனே - நமோ, நமோ!
சொந்தக் குமாரன் தந்தாய்,
சொல்லரும் நலமீந்தாய்,
எந்தவிர் போக்குமெந்தாய், நமோ, நமோ, நமோ. - சீர்

2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ!
எங்கும் நின் அரசேற,
எவரும் நின் புகழ்கூற,
துங்க மந்தையிற் சேர, நமோ, நமோ, நமோ. - சீர்

3. பரிசுத்த ஆவிதேவா நமோ, நமோ, திட
பலமளித் தெமைக்காவா, நமோ, நமோ!
கரிசித்துத்தா நற்புத்தி,
கபடற்ற மனசுத்தி,
திருமொழி பற்றும்பக்தி, நமோ, நமோ, நமோ - சீர்

ராகம்:பூரிகல்யாணி
தாளம்:ஆதிதாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்