213. சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா, சுந்தரக்குமாரா

பல்லவி

சுய அதிகாரா, சுந்தரக் குமாரா!
சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான   - சுய

சரணங்கள்

1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே,
அதையொரு பம்பரம் போலிசைத்தனையே,
துகில்போலா காயமதை லகுவாய்ச் சமைத்ததிலே
சோதி பல மாதிரியாய்த் தூக்கி அங்கிலங்க வைத்த - சுய

2. கரை மத கற்ற குளம் புவியிலுண்டோ?
கடலுக்கவன் சொல்லயன்றிக் கரைகளுண்டோ?
திரைதிரையாகச்சலம் மலைபோல் குவிழ்ந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மாதயவாய்ப் பாதுகாக்கும் - சுய

3. நரர் பலர் கூடியொரு மனைமுடிக்க
நாளெல்லாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே;
மரமுயிர் தாது இன்னும் வான்புவி அனைத்தையும் ஓர்
வார்த்தையால் க்ஷணப்பொழுதில் நேர்த்தியாய் 
                                                          உண்டாக்கி வைத்த - சுய

4. பாவமனுவோர் முகத்தைப் பார்த்தாயே,
பாவச்சுமை தோள் சுமந்து தீர்த்தாயே;
சுவாமியுனைப் பற்றும் தேவ தாசருக்கிரங்கவேண்டும்,
தஞ்சம் தஞ்சம் ஓடிவந்தோம், கெஞ்சமனு கேட்டருள் 
                                                                                    வாய் - சுய


ராகம்: கமாஸ்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: யோவான் பால்மர்