216. சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

சூரியன் மறைந்து

1. சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது.
சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப்போகுது,
தூயா கிருபை கூர்ந்து காருமையா!

2. பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே,
சகல தீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே,
சுவாமி உந்தன் பாதம் பணிகிறேன்.

3. பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகா,
பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையா,
கோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய்.

4. ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்,
பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல்,
நேயா நின் நல்தூதர் காவல்தா.

5. ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்,
ஐயனே உன் பொன்னடி சரணம்.


ராகம்: நாதநாமக்ரிகை 
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ஐ. சாமுவேல்