சேர் ஐயா
பல்லவி
சேர், ஐயா; எளியேன் செய் பவ வினை
தீர், ஐயா.
சரணங்கள்
1. பார், ஐயா, உன் பதமே கதி;-ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி,-எனைச் - சேர்
2. தீதினை உணர்ந்த சோரனைப்-பர
தீசிலே அன்று சேர்க்கலையோ?-எனைச் - சேர்
3. மாசிலா கிறிஸ் தேசுபரா,-உனை
வந்தடைந்தனன்; தஞ்சம், என்றே-எனைச் - சேர்
4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர்-தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினையே;-எனைச் - சேர்
5. பாவம் மா சிவப்பாயினும்,-அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே;-எனைச் - சேர்
6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த-யேசு
தேவனே, கருணாகரனே,-எனைச் - சேர்
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்