219. சொல்லரும் மெய்ஞ்ஞானரே

சொல்லரும் மெய்ஞ்ஞானரே

பல்லவி

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே.-உரை

அனுபல்லவி

வல்லறஞ் சிறந்து மனுவானாரே,-உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே,-உரை - சொல்

சரணங்கள்

1. மாடாயர்[1] தேடும் வஸ்துபகாரி,-மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,[2]
வையகம் புரப்பதற்கு வந்தாரே,-அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே,-உரை - சொல்லரும்

2. அச்சய[3] சவுந்தர அசரீரி,-அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,[4]
ஐயா வல்லாவே, மாதேவா,-ஓ!
துய்யா,[5] நல்லாவே, ஏகோவா,-உரை - சொல்லரும்

3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே,-உயர்
தேவ குலமாய் எமைச் சேர்த்தாரே;
பக்கிஷத்தால்[6] முகம் பார்த்தாரே,-பெரும்
பொக்கிஷம் போல் எமைச் சேர்த்தாரே,-உரை - சொல்லரும்


ராகம்: உசேனி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்

[1] மாட்டிடையர்
[2] தயாளன்
[3] அழிவில்லாத
[4] அருட்கடலே
[5] பரிசுத்தனே
[6] பட்சத்தால்