1. பாடி, வேத போதனை
கேட்டு, ஜெபிக்க அன்பான
கர்த்தர் இப்போ கிருபை
செய்ததாலே நம்மை வான
ஊணுல் போஷித்ததற்காக
அவரைத் துதிப்போமாக.
2. ஆசீத்வாதம் நமது
மீதில் கூறப்பட்டதாலே
களிப்பாக வீட்டுக்குச்
சென்று, தேவ ஆவியாலே
துணைபெற்று, பக்தியாக
நாம் நடந்துகொள்வோமாக
3. ஸ்வாமி, எங்கள் போக்குக்கும்
வரத்துக்கும் சித்தி தந்து,
ஊண்உழைப்போடோய்வையும்
நீர் ஆசீர்வதித்து வந்து,
நல் முடிவைத் தந்து காரும்;
மோட்சத்தில் பிரவேசம்தாரும்.
Hartmann Schenck, † 1681