1. கர்த்தருக்குத் தோத்திரம்;
மீட்போமென்ற வாசகம்
பிசகாமல், ஆண்டவர்
மீட்பரை அனுப்பினார்
2. முற்பிதாக்கள் யாவரும்
தீத்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது
வந்து நிறைவேறிற்று.
3. ஆப்ரகாமின் மா பலன்
இஸ்ரவேலின் சூரியன்
என்ற கன்னி மைந்தனே
வந்தார், சீயோன் உன்க்கே.
4.வாழ்க, என் வெளிச்சமே,
ஓசியன்னா, ஜீவனே.
என் இருதயத்திலும்
தயவாய் ப்ரவேசியும்.
5. உள்ளே சேரும், ராயரே,
என் நேஞ்சும் முடையதே;
பாவழுக்கனைத்தையும்
அதனின்றே நீக்கவும்.
6. நீர் சாதுள்ள தயவாய்
வந்தீர்; அந்த வண்ணமாய்
இப்போதென்மேல் மெத்தவும்
நீண்ட சாந்தமாயிரும்.
7. சாத்தான் வெகு சர்ப்பனை
பண்ணியும், என் மனத்தை
நீர் எல்லாப் பயத்திலும்
ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்.
8. நான் அஞ்சாமலிருக்க,
உம் மீட்பால் கெம்பீரிக்க,
சர்ப்பத்தின் தலையை நீர்
வென்றுடைக்க்க் கடவீர்.
9. மீண்டும் நீர் வருகையில்,
ஜீவாதிபதி, என்னில்
உமதந்தஞ்சாயலும்
காணக் கட்டளையிடும்.
O.B. 128 N.B. 150
H.Held, † circa1643