1. சீயோனில் ப்ரவேசிக்கும்
தாவீதின் குமாரனுக்கு
ஓசியன்னா யாவரும்
தோரணங்கள் அவருக்குக்
கட்டி, குருத்தோலைகள்
வழியில் தெளியுங்கள்
2. ஓசியன்னா, வாழ்கவே,
உம்மைக் களிப்பாய்ச்சந்தித்து,
திருப்பாதத் தண்டையே
நாங்கள் தாழ்ந்து தெண்டனிட்டு
இதயத்தைத் திறந்தோம்.
உள்ளே வாரும் என்கிறோம்.
3. ஓசியன்னா, வேந்தரே,
சமாதானக் கர்த்தா, நீரே
சத்துருக்கள் பேரிலே
வெற்றி சிறந்தாளுவீரே.
உம்முடைய ராச்சியம்
என்றும் அழியாததாம்,
4. ஓசியன்னா, நாங்களும்
நீர் தெரிந்து கொண்டோரான
குடிகளாய் என்றைக்கும்
உம்முடைய சாந்தமான
செங்கோலின் கீழ் வாழவே,
ஆளும் எங்கள் நெஞ்சிலே.
5. ஓசியன்னா, சீயோனில்
வந்து சேரத் தீவிரியும்.
அது நீர் மா தாழ்மையில்
வந்தம் உம்மைக் கண்டறியும்.
நீர் தாவீதின் சுதனே,
நித்ய தெய்வ மைந்தனே.
6. ஓசியன்னா, ரட்சியும்,
எல்லாம் வாயக்கச் செய்வீராக;
எங்கள் நெஞ்சை முற்றிலும்
உமக்கே படைப்போமாக.
கீழ்ப்படியும் மனது
தேவரீருக்கேற்றது.
7. ஓசியன்னா, வாழ்கவே,
நீர் வெளியே நில்லீராக,
ஆசீர்வாதக் கர்த்தரே,
உள்ளே சேரும் வேகமாக.
ஓசியன்னா, ராட்சகா,
வாருமே, அல்லேலூயா.
Benj. Schmolck, † 1737