1. சந்தோஷத்தோடிருங்கள்,
எல்லாச் சன்மார்க்கரே,
துதி பலியிடுங்கள்;
ராஜாதி ராஜாவே
ரட்சிப்புண்டாக்குவார்,
பொல்லாங்கனை நன்றாக
ஜெயிக்க ஏழையாக
ப்ரசன்னமாகிறார்.
2. எளியோராய் வந்தேறி
ப்ரவேசம் பண்ணினார்.
உலக வாழ்வைத் தேடி
பகிர வந்திரார்.
நமக்கு வானவர்
சுதந்திர முண்டாக
அவர் பலியாயச் சாக
ப்ரவேசம் பண்ணினார்.
3. பரங்களுக்கும் ஏற
உயர்ந்த ஆண்டவர்
செங்கோல் கிரீடந்தேட
இப்பூமியில் வரார்.
அவர் மகத்துவம்
இங்கவர் நமக்காக
மரிக்கும் நாள்மட்டாக
மகா ஒளிப்பிடம்.
4. துரைகளே, நற்புத்தி
அடைந்து, இவர்க்கே
கனமெல்லாஞ் செலுத்தி.
நடுக்கத்துடனே.
இருந்தால் பாக்கியம்.
ஏன், கீழ்ப்படாதோர் மீது
இனி இறங்குந் தீது
மகா பயங்கரம்.
5. இப்போதும் இங்கும் அங்கும்
உபத்ரவத்திலே
இக்கட்டினால் கலங்கும்
எளியவர்களே,
எல்லாப் பயத்தையும்
மறந்து, இவர் தாமே
எல்லாக் கதியுமாமே
என்றாடிப் பாடவும்.
6. தம்மை ப்ரஸ்தாபமாக
வெளிப்படுத்துவார்.
அப்போ மா பூரிப்பாக
துக்கிப்பை மாற்றுவார்.
கண்ணீரைத் துடைப்பார்.
தீவட்டியைப் பிடித்து,
ஜெபத்திலே விழித்து
இருங்கள் வருவார்.
M.Schirmer, † 1673