21. இயேசுவினாலே மெய்ப்

1. இயேசுவினாலே மெய்ப் பூரிப்புண்டாகும்;
அவரில் மனித ஸ்பாவமுமே
தேவ சுபாவத்தோடொருமையாகும்,
நமக்கு அவர் ஒப்பானவரே.
இது பெரிய அதிசயமாமே,
இயேசுவினாலே மெய்ப் பூரிப்புண்டாமே.

2. பாவிகளே, உங்கள் மீட்பராய் வந்தார்,
உங்கள் கடனைச் செலுத்தத் தாமே
சிலுவையில் பலியாகி இறந்தார்.
நமக்காய்த் தமதிரத்தத்தையே
சிந்தினார், நமக்காய் உயிரைத் தந்தார்;
பாவிகளே, உங்கள் மீட்பராய் வந்தார்.

3. அவரே தந்தை அனுப்பின மீட்பர்,
நம்மைப் பிதாவண்டை சேர்ப்பதற்கு
அவர்தாம் எந்தக் கணக்கையுந் தீர்ப்பர்;
அவரை நீங்களும் தோத்திரித்து
வாருங்கள்; அவர் அனைத்தையுந் தீர்ப்பர்;
அவரே தந்தை அனுப்பின மீட்பர்,

4. அவரால் கட்டுகள் துண்டு துண்டாகும்,
மரணச் சங்கிலி நீங்கிவிடும்,
பாடு பட்டோருக்கு மேன்மை உண்டாகும்,
பேயுந் தள்ளுண்டு முறிந்து விழும்,
இயேசுவால் நமக்கு வெற்றி உண்டாகும்,
அவரால் கட்டுகள் துண்டு துண்டாகும்.

5. நமக்கு நித்திய ஜீவனைத் தந்தார்,
பயத்தை நீக்கி, இதயத்தையே
நற்குணத்தாலேயுஞ் சோடித்து வந்தார்,
நமது தமையர் அவராமே.
நமது பாவத்தை அப்புறம் பாரார்,
நமக்கு நித்திய ஜீவனைத் தந்தார்.

6. ஆடுகளுக்கவர் மேயப்பருமாமே,
கெட்டுத் திரிகிற உங்களையும்
தேடும் இரட்சகர் அவரே தாமே;
உங்களைத் தமது மேய்ச்சலுக்கும்
கொண்டுவர அவர் ஆயத்தமாமே;
ஆடுகளை அவர் மேய்ப்பவராமே.

7. நெஞ்சைத் திருப்ப இக்கர்த்தரால் ஆகும்;
அவருக்கு வாசலைசீக்கிரமாய்
நீங்கள் திறவுங்களேன், அப்போதாகும்;
நேசராம் அவரை உண்மையுமாய்
நீங்கள் சிநேகித்தால் மோட்சமுண்டாகும்;
நெஞ்சைத் திருப்ப இக்கர்த்தரால் ஆகும்.

8. அவர் குணப்பட்டோர் பொக்கிஷமாமே,
தம்மைச் சேர்ந்தோரின் துணை அவரே.
துக்கித்தவர்க்கவர் சூரியனாமே;
மிகுதியான இரக்கமுண்டாமே;
அவர் குணப்பட்டோர் பொக்கிஷமாமே.

9. வரும் எல்லாரையும் இயேசு ரட்சிப்பார்;
என்னண்டை வாருங்கள் என்கிறாரே.
தாகமுள்ளோருக்குத் தண்ணீர் அளிப்பார்.
ஜீவதண்ணீரின் ஊற்றவராமே.
தேவையாம் ஆறுதலை வருவிப்பார்;
வரும் எல்லாரையும் இயேசு ரட்சிப்பார்.

10. திக்கில்லாப் பேருக்கவர் பிதாவாமே;
ஏழைகட்கவர் அடைக்கலமும்,
நோயாளியின் பரிகாரியுமாமே,
துன்பப்பட்டோர்கள் அனைவருக்கும்
அவர் தாம் கோட்டையுந் துர்க்கமுமாமே;
திக்கில்லாப் பேருக்கவர் பிதாவாமே.

J.A. Freylinghausen, †1793.