1. வாரும், லோக மீட்பரே,
கன்னி பெற்ற மைந்தனே,
நீர் பிதாவின் காணிக்கை
உலகத்தின் அருமை.
2. தாய் திவ்விய ஆவியால்
கர்ப்பவதி யானதால்
ஆதி வார்த்தை நமக்கு
ஒத்த ஜென்மமாயிற்று
3. கற்புடைய சுத்தத்தின்
சீர்கலங்காக் கன்னியின்
கர்ப்பத்தில் மா ஆண்டவர்
உற்பவித்துப் பிறந்தார்.
4. சூரியோதயத்துக்குச்
சாயலாக நமது
பொழுதான ராட்சகர்
தாழ்விலே உதித்தவர்.
5. உன்னதத்தினின்றிங்கே
நம்மண்டைக்கு வந்தாரே;
பேயை வென்றிறங்கினார்,
மீண்டும் வானம் ஏறினார்.
6. நித்திய பிதாவுக்கே
ஒத்த ஸ்வாமி, உம்மிலே
நீர் பிறந்த இனமும்
வெல்லத் துணைபுரியும்.
7. உம்முடைய முன்னணை
மின்னி, ராவில் ஒளியைக்
காட்டும்; எங்கள் நெஞ்சிலும்
நீர் ப்ரகாசித்தே யிரும்.
8. உன்னத பிதா சுதன்
ஆவியை அவனவன்
தயவுள்ள தம்பிரான்
என்று போற்றக் கடவான்.
M. Luther, † 1546