1. சபையே இன்று வானத்தைத்
திறந்து தமது
சுதனை ஈயும் ஸ்வாமியைத்
துதித்துக் கொண்டிரு.
2. பிதாவோடெத்த இவரே
குழந்தையாகிறார்;
திக்கற்று முன்னணையிலே
கிடக்கவும் வெட்கார்.
3. சிறியோராக ஆண்டவர்
பலத்தை மாற்றினார்
அடிமை ரூபைச் விஷ்டிகர்
தாமே எடுக்கிறார்.
4. தூதாட்களின் அதிபதி
தாய்ப்பாலைஉண்கிறார்.
எளிய கன்னியாஸ்திரி
ஆண்டவரின் தாயார்.
5. அவர் புவியில் பரம
இராச்சியத்தையே
உண்டாக்க வந்தோராகிய
தாவீதின் மைந்தனே.
6. தெய்வீக ஸ்வாபம் நம்மிலே
உண்டாக, ஆண்டவர்
நரரின் ஸ்வாபமாய் இங்கே
பிறந்திருக்கின்றார்.
7. தாழ்ந்தோர் அவர், உயர்ந்தோன் நான்
இதென்ன மாறுதல்
இதுன்னத சிநேகந்தான்,
இதன்பின் ஆழங்கள்.
8. திரும்பப் பரதீசுக்கு
வழி திறந்துபோம்;
கேரூபின் காவல் வாங்கிற்று;
மகிழ்ந்து பாடுவோம்.
N. Hermann. † 1561