24. தூதர்கள் சந்தோஷமாகப்

1. தூதர்கள் சந்தோஷமாகப்
பாடவே, என்னிலே
நெஞ்சுதுள்வதாக.
கேளுங்கள், ஆகாசமெங்கும்
கிறிஸ்துவின் – பிறப்பின்
கீதங்கள் முழங்கும்.

2. இன்று ரட்சகர் பிறந்தார்,
நமது – மீட்புக்கு
மீட்பராய் உதித்தார்.
தேவமைந்தன் தாழ வந்தார்.
கடவுள்,-நமக்குள்
மாந்தனாய்ப் பிறந்தார்.

3. கேட்டை நம்மை விட்டகற்ற,
இன்றைக்கு- நமக்கு
தாம் பிரியப்பட்ட
மைந்தனைக் கொடுத்த நல்ல
ஆண்டவர்,- மனிதர்
சத்துராரி அல்ல.

4. தம்மை நமக்கீவாய்த் தந்து,
நம்மண்மை- வேதனை
எல்லாம் நீக்க வந்து
மீட்பரான தேவ பிள்ளை
நேசமும்- தயவும்
அற்றிருப்பதில்லை.

5. தாம் நராட்களைப் பகைத்தால்,
அல்லது- கேட்டுக்குத்
தீர்த்துக்கொண்டு வைத்தால்,
என் இச்சென்மமாய்ப் பிறப்பார்.
ஏன் அவர்,-மனிதர்
பாரத்தைச் சுமப்பார்.

6. கெட்டுப்போன நமக்காகக்
கஸ்தியாய்- நோவுமாய்
உத்தரித்துச் சாக,
ஆட்டுக்குட்டியாகத் தாமே
தாழ்மையாய்-சாதுவாய்
இங்கே வந்தோராமே.

7. அவர் வெகு பட்சத்தோடே
ஏழையை- நீசனைப்
பார்த்து, அவனோடே;
என் சகோதரா, என்னாலே
நோய்க்கெல்லாம்- முடிவாம்
என்கிறார் அன்பாலே.

8. ஆகையால் எல்லாருமாகத்
துக்கத்தைத் – தீர்ப்பாரை
அண்டிக்கொள்வோமாக.
நரநேசர் இவர்தாமே
க்டாட்சமும் ஜீவனும்
இவரால் உண்டாமே.

9. துன்பத்தால் வதைந்தபேரே,
சகல-ஆனந்த
செல்வத்துக்கும்நேரே
போகும் வாசலும் வழியும்
கிறிஸ்தல்லோ;- பாடிப்போ
மிஞ்சியும், முடியும்.

10. எவனைத் தன் பாவங்குத்தி,
இரவும்- பகலும்
கவலைப் படுத்தி
வருமோ, அவனுக்காக
ரட்சகத் வந்தவர்
மத்தியஸ்தராக.

11. ஏழைகைள் தாராளமாகக்
கிறிஸ்தண்டை- கைகளை
நீட்டுவார்களாக.
இங்கே ஆத்தம்ம் பிழைக்கும்
சகல- பூரண
நன்மையுங் கிடைக்கும்.

12. உம்மைக்கொம்பாய் நான் பிடிப்பேன்.
மீட்பரே,- உம்மிலே,
என்றைக்குந் தரிப்பேன்;
நீர் என் ஜீவன், சாவைக்காணேன்,
சாபமே,- திகிலே,
போ, நான் நீங்கலானேன்.

13. என் கடன் என்மேல் நிற்காது
என் திரள்- பாவங்கள்
அப்புறங் காணாது.
யாவையுஞ் சுமந்து தீர்ப்பர்,
ஸ்வாமி, நீர்-தேவரீர்
மா பலத்த மீட்பர்.

14. உம்மால் சுத்தமாயிருப்பேன்,
மா தூய- பூரண
நீதியை உடுப்பேன்.
உம்மை மனதில்அடைப்பேன்.
உம்மையே – அதிலே
ஆஸ்தியாகவைப்பேன்.

15. இங்கே உமக்குப்பிழைப்பேன்
உம்மையே- சாவிலே
பற்றிக்கொண்டணைப்பேன்.
அங்கே எனக்கென்றென்றைக்கும்
உம் திவ்ய- பாக்கிய
சமுகங் கிடைக்கும்.

P. Gerhardt, †1676