1. என் நெஞ்சே, கர்த்தராகிய
குழந்தையைச் சந்தித்து,
சந்தோஷத்தோடு கும்பிட
நீ வாஞ்சையாகக் கிட்டு
இதுன் ரட்சகர் தாழ்மையாய்
நரரை மீட்கச் சித்தமாய்
பிறந்து வந்த ராவே,
மகிழ், என் ஆத்துமாவே.
2. ஆ, இன்ப மணவாளனே,
ஆ, தெய்வ ஆட்டுக்குட்ட,
ஆ, மகிமையின் ராஜாவே,
நான் உம்மைப் பாதமுத்தி
செய்தும்மை மனம் வாக்கினால்
துதித்து, ஜீவனுள்ள நாள்
எல்லாம் என் மீட்பராக
நான் தோத்திரிப்போனாக.
3. ஆ, ஸ்வாமி, உமதுன்மத
அரண்மனையை விட்டு,
பகை கொலை நிரம்பிய
புவியில் நீர் பிறந்து
உம் பகைஞரின் நிமித்தம்
மரிக்க உமதானந்தம்
செங்கோலையும் வெறுக்கும்
அன்பே ஒப்பற்றிருக்கம்.
4. ஆ, இன்பமான பிள்ளையே,
நீர் முழு தயவாமே
சகோதர சிநேகரே,
என் பொக்கிஷம் நீர்தாமே,
இப்பாவிமேல் இரக்கமாய்
நீர் முன்னணையை விட்டன்பாய்
என் நெஞ்சில் தங்க வாரும்,
என் வேண்டுதலைத் தாரும்.
5. என் மன மணவாளனே,
நான் ஏங்கிப் பற்றிக்கொள்ளும்
கதியே, என்ன உமக்கே
பிரியம் என்ன சொல்லும்
என் ஆவி தேகம் யாவையும்
அங்கீகரியும், என்றைக்கும்
நான் உமக்கென்னை ஈவேன்;
வேறொன்றும் இனி நாடேன்.
6. என் கேட்டைநீக்கநீர், கர்த்தா,
என் போலவே பிறக்கும்
அதிசயத்தை என் எல்லா
உள்ளிந்த்ரியந் துதிக்கும்
நான் இதை இங்கே, நித்தமும்
பிற்பாடு அங்கே என்றைக்கும்
மகிழ்ச்சியோடே பாடும்
அனுக்ரகத்தைத் தாரும்.
Joh. Rist. † 1667