30. இயேசுவே, வானத்தை

1. இயேசுவே, வானத்தை விட்டிங்கே வருகிறீரோ,
விண்ணுடன் மண்ணை நீர் ஒப்புரவாக்கத் தாழ்ந்தீரோ,
ஆண்டவரே- என்னை நீர் மீட்பதற்கே
மனிதப் பிறப்பானீரோ.

2. ஆதித் தகப்பனால் போனதனைத்தையும் நீரே
உமது மீட்பினால் எனக்குத் தேடிவைப்பீரே.
எனக்குண்டாம்- நோவும் இக்கட்டுமெல்லாம்
தீர, நீர் உற்பவித்தீரே.

3. என்னைப் பிசாசு பிடித்துக் கெடுக்க விரும்பும்
மரணம், நரகம் என்னை விழுங்க எழும்பும்.
மீட்பரே, நீர்- வந்த்தால் எனது சீர்
பாக்கியமாகத் திரும்பும்.

4. இயேசுவே, எனக்குள் நல்லகுணத்தை உண்டாக்கும்;
ஆவியை, தேகத்தை உம்து ரூபுக்கொப்பாக்கும்.
உம்மை மகா- பக்தியாய்ப் போற்றிவர
என்னை எச்சரிக்கை செய்யும்.

5. என்னையும் நீர் விசுவாசிகளுக்குக் கொடுக்கும்
நித்திய ஜீவனின் வாழ்வுக்கும் ஆனந்தத்துக்கும்
கொண்டு போமேன்- என்று மன்றாடுகின்றேன்.
அங்கே என் மனமிருக்கும்.

C.F. Nachtenhoefer, †1685.