1. பிதாவுக்கு ஒன்றாகப்
பிறந்த நற்சேயா
அவரின் அச்சுமான
அனாதி சூரியா,
வானோரனைவராலும்
பணியப்பட்டன்பாலும்
நிறைந்த கிறிஸ்துவே.
2. அடியோர் நன்மைக்காகக்
குறித்த காலத்தில்
நீர் நர ஜென்மமாக
எளிய கன்னியில்
பிறந்து சாவைவென்று,
உயிரைத ஈவோமென்று
ரட்சிப்பைக் கூறினீர்.
3. நற்பக்தியில் பலத்து,
நற் சீரில் பெருகி,
உம்மால் நிரப்பப்பட்டு
மா வாஞ்சையாய் இனி
தெய்வறிவில் வளர
தெய்வன்பையும் உணர
சகாயராயிரும்.
4. அனைத்தையும் படைத்த
பிதாவின் சக்தியே,
நராட்களை ரட்சித்த
தெய்வீக மீட்பரே,
உம்மோடே ஐக்யமாக
நீர் எங்களை நன்றாகத்
திருப்பும், இயேசுவே.
5. நீர் எங்களில் உண்டான
பொல்லாப்பை முற்றிலும்
அழித்து, நவமான
குணத்தைப் படையும்.
எப்போதும் உம்மைத்தேட
நீர் எங்கள் நெஞ்சை ஏற
இழுத்துக்கொள்ளுமேன்.
Elisabeth Creutziger † 1558.