34. ஆ, இயேசு, உமது

1. ஆ, இயேசு, உமது
நேசத்துக்கொப்பிராழ,
விண் மண்ணிலுள்ளவர்
துதிப்புக்கும் எட்டாது.
நீர் நர ஜென்மத்தை
எடுத்தென் சாபத்தைச்
சுமந்து கொண்டது
மட்டற்ற கிருபை

2. நீர் பெற்ற நாமமே
குளிர்ந்ததாயிருக்கும்;
அதென் வியாகுலம்
அனைத்தையும் எடுக்கும்.
நீர் இயேசு என்றதாய்
அழைக்கப்பட்டது
மா இன்பம், அதினால்
என் துக்கம் நீங்கிற்று.

3. அன்புள்ள இயேசுவே,
நீர் எனது களிப்பு.
நீர் கொண்ட நாமமும்
அனைத்திலும் தித்திப்பு.
நான் துயரப்பட்டேன்;
ஏன், இயேசு என்பவர்
 வியார்த்தியின்படி
பலத்த ரட்சகர்.

4. பிசாசு மனத்தைத்
தன் தீவினைகளாலே
கலைக்கப் பார்க்கையில்,
இம்மேன்மை நாமத்தாலே
திரும்ப ஆறுதல்
வெளிச்சம் ஞானமும்
உண்டாகி, சகல
இருளும் போய்விடும்.

5. என் மீறுதல்களால்
நான் மெத்தக் குற்றவாளி,
நீர் இயேசு ஆகையால்
நான் மோட்சத்தின் பங்காளி,
என் பாவக் குற்றத்தை
நிவர்த்தி பண்ணினீர்,
பிதாவின் தயவை
என்மேல் விரிக்கிறீர்.

6. என் பாவத்தீட்பை நீர்
பரிகரிப்பீராக
அசுத்தனான நான்
மாசற்றுப் போவேனாக
உம்மால் என் சாபமும்
என் குஷ்டரோகமும்
போய், ஆசீர்வாதமும்
சுகமுங் காணவும்.

7. நீர் இயேசு என்பது
மகிழ்ச்சியைக் கொடுக்கும்
வறட்சியில் அது
மழையைப்போல் இருக்கும்.
ஆ, உம்முடைய பேர்
என் அரண் கோட்டையும்
களமுஞ் செல்வமும்
கதியமாகவும்

8. நீர் மோட்சத்தின் வழி,
நீர் சத்தியம் உயிரும்,
உம்மால் இப்பூமியில்
என் ஆத்துமம் மகிழும்.
நான் சாகப் போகையில்
உம்மால் என் முடிவும்
நற்பாக்கியத்துடன்
இருக்கக் கற்பியும்.

9. ஆனாலும் அடியேன்
இருக்கும் நாள் மட்டாக
நான்றாய் நடக்கவே
ஒத்தாசை செய்வீராக.
நான் செய்யவேண்டிய
என் ஊழியத்துக்கும்
நீர் உமதாவியின்
வரத்தைத் தரவும்.

10. நான் இயேசு நாமத்தில்
தினம் எழுந்திருந்து;
நான் இயேசு நாமத்தில்
என் வேலைக்குட்புகுந்து,
நான் இயேசு நாமத்தில்
எப்போதும் யாவையும்
முடித்துப் போடவும்

11. நான் தேவரீருக்கு
இவ்வுலகில் பிழைப்பேன்.
நான் தேவரீரையே
மரிக்கும் போதணைப்பேன்
உம்மாலே மோட்சத்தில்
நான் உட்பிரவேசிப்பேன்.
அங்கும்மை என்றைக்கும்
துதித்துப் போற்றுவேன்.


J. Heermann, †1647