1. என்னை, இயேசுவே,
உம்மிடத்திலே
வரச்சொல்லும், சேர்த்துக்கொள்ளும்,
ஸ்வாமி இயேசுவே.
2. தாழ்வில் ஜென்மித்தீர்,
பெத்லகேமில் நீர்
ஏழைக்காக ஏழையாக
வந்து ஜென்மித்தீர்.
3. நல்ல இடமே
பெத்லகேம் ஊரே,
நீ அனந்த வாழ்வைத் தந்த
நல்ல இடமே
4. நீ சிறியது,
இந்தப் பூமிக்கு
ஜோதி காண மூலமான
நீ பெரியது.
5. தெய்வ வசனம்
என் நட்சத்திரம்,
கிறிஸ்தைக் காட்டித்தரும் ஆசான்
தெய்வ வசனம்.
6. உமக்கேங்கினேன்,
காட்சி தாருமேன்,
ஆவலோடும் பக்தியோடும்
உமக்கேங்கினேன்.
7. உம்மைக் காண்பியும்
மறையாதிரும்,
தெளிவாக அன்புமாக
உம்மைக் காண்பியும்.
8. தேவப் பிள்ளையே,
வல்ல மீட்பரே,
உம்மை நாடும் நெஞ்சு பாழும்
தேவப் பிள்ளையே.
9. இன்ப நெசரே,
தேவரீரையே
என்றும் பாடும் பேற்றைத்தாரும்
இன்ப நெசரே,
A. Drese, † 1718.