1. கர்த்தாவைப் போற்றுங்கள், எல்லா
உலகின் ஜாதியாரே;
கர்த்தாவைப் பாடுங்கள், மகா
திரள் பூலோகத்தாரே
இதோ, பிரிய மைந்தனைத்
தந்திவராலே உங்களை
அன்பாய்ச் சந்திக்க வந்தார்.
2. அதேனென்றால் அவரது
இரக்கமுந் தயையும்
மாறா உண்மையும் ஓயாது
உயர்ந்த கிருபையும்
அடியார் மேலே மிகவும்
பெரியதாகி, என்றைக்கும்
நிலைக்கும், அல்லேலூயா.