43. மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும்

1. மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும்
வதைக்கப்ட்ட உடலும்
என் உடல் ஆவி யாவையும்
நன்றாய்க் குணப்படுத்தவும்.

2. அவர் விலாவால் மிகவும்
பொழிந்த ரத்தம் தண்ணீரும்
என் ஸ்நானமாகி, எனக்கு
உயிர்தரக் கடவது.

3. அவர் முகத்தின் வேர்வையும்
கண்ணீர் அவதி துடக்கமும்
அந்நாளின் தீர்ப்பழிப்புக்கும்
இப்பாவியை விலக்கவும்.

4. ஆ, இயேசு கிறிஸ்தே, உம்மண்டை
ஒதுக்கைத் தேடும் ஏழையை
நீர் பட்டக் காயங்களிலே
மறையும், நீர் என் மீட்பரே.

5. என் மரண அவஸ்தையில்
நீர் என்னைத் தேற்றி, மோட்சத்தில்
நான் என்றும் உம்மைத் தொழவே
வரவழையும், கர்த்தரே.

Joh. Scheffier,  † 1677