1. பெரிய வாதைகளையே
பொறுமையாய்ச் சகித்தீர்,
தேவாட்டுக்குட்டி இயேசுவே,
நோவில் சாதாய் இருந்தீர்.
என் பாடுகளில் என்னையும்
பொறுமையாக்கியருளும்.
2. உபத்ரவத்தில் கூடவா,
நீ சிலுவையின் கீழே
அடங்கி நின்று, என்பின் வா
மகிழ்ந்திரு என்றீரே
ஆ, நானும் ஆட்டுக்குட்டியைப்
போல் சாதுவானால் தாவிளை
3. உம்மோடே சிலுவையிலே
அறையப்பட்டுச் சாக
நான் ஆசையாயிருப்பேனே;
என் நெஞ்சில் அதற்காக
ஓர் ஆட்டுக்குட்டியின் குணம்
உண்மாயிருந்தால் பாக்கியம்.
4. என்மேல் நிஷ்டூரம் நிந்தையும்
அடிகளும் விழட்டும்
எல்லா இக்கட்டும் ஆபத்தும்
உபாதியும் வரட்டும்.
வந்தும் ஓர் ஆட்டுக்குட்டிக்கே
நான் ஒப்பாகட்டும் இயேசுவே.
5. பரத்துக்குப் போவோருக்கு
உபத்ரவமுண்டாமே.
நீர் மகிமைக்குப் போனது;
அதே வழியுமாமே;
ஆர் உம்முடன் சகிக்கானோ,
உம்மோடே வாழக்கூடுமோ.
J. Scheffier, †1677.