1. அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தெதற்காக,
நீர் என்ன செய்தீர், தேவரிரீன் மீது
ஏன் இந்தத் தீது.
2. வாரால் அடிக்கப்பட்டு, எண்ணமற்றீர்,
குட்டுண்டு முள்முடியுஞ் சூட்டப்பட்டீர்.
பிச்சுண்கத் தந்து, உம்மைத் தூக்கினார்கள்,
வதைக்கிறார்கள்.
3. இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்மாயிற்று; ஐயோ, என் பாவத்தாலே.
அதும்மை ஸ்வாமி, இவ்வாறாய் அடித்து,
வதை பண்ணிற்று.
4. மா ஆச்சரியம், கர்த்தர் சாக வந்தார்,
நல் மேய்ப்பர் மந்தைக்காக உயிர் தந்தார்;
அடியார் தப்ப குற்றமற்ற மீட்பர்
கட்னைத் தீர்ப்பர்.
5. சன்மார்க்கர் ஆக்கினைக்குள்ளார் விழுந்து
மரித்தார், தீயோருக்கு ஜீவனுண்டு.
வெட்டுண்க மனிதர் பாத்திரராமே,
மாண்டோர் நீர்தாமே.
6. என் உள்ளங்கால் துவக்கி உச்சி மட்டும்
பொல்லாப்பினால் நிறைந்தும் நன்மையற்றும்
இருக்கும் நானே என்றும் அவகீர்த்தி
அடைதல் நீதி.
7. இவ்வாதையை நீரே சகிக்கும் சாது
இரக்கம் பட்சம் அன்பும் மட்டில்லாது
நான் லோகத்தோடே வாழ்ந்தேன், உம்மை முற்றும்
நிர்ப்பந்தஞ் சுற்றும்.
8. உயர்ந்த ராஜா, இதந்கேற்றதாகும்
துதியைப் பாட எவனாலே ஆகும்;
செலுத்தத் தக்க தேவன் உள்ளத்துக்கும்
தோன்றாதிருக்கும்.
9. நான் உமதன்பை யோசித்தும் தெரியேன்,
அதற்கோ ஒப்பனையும் நான் அறியேன்,
பின் எப்படி பதில் நலம் அளிப்பேன்;
நான் வெட்கி நிற்பேன்.
10. ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்,
நன் உம்மைப்பற்றி, யாவையும் வெறுக்கும்
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்
பண் உமக்கேற்கும்.
11. இதற்கும் என் சாமர்த்தியம் போதாது,
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது,
நீர் உமதாவியை அளித்து வாரும்,
பலத்தைத் தாரும்.
12. அப்போ நான் உமதன்பினால் நிறைந்து,
பூலோகக் குப்பைக்கோ வெறுப்படைந்து,
என்நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்.
13. நீர் கனப்பட நான் எல்லாவற்றிற்கும்
துணிந்து, நிந்தை வாதை துன்பத்திற்கும்
அஞ்சாதிருப்பேன், சாவுக்கும் அடியேன்
அருக்களியேன்.
14. இதெல்லாம் கொஞ்சக் காரியமானாலும்,
குறை பிழை இத்துடனே கண்டாலும்,
என் பலவீனத்தை அன்பாய்ச் சகிப்பீர்
பிழை மன்னிப்பீர்.
15. பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும் போதெல்லாக் குறைவுமற்று
எப்போதும் உம்மை, இயேசுவே துதிப்பேன்,
நான் தோத்திரிப்பேன்.
J.Heermann, †1647.