71. மா துக்கத்தின் பிற்பாடு

1. மா துக்கத்தின் பிற்பாடு
இன்றே விளங்கிய
வெளிச்சத்தைக் கொண்டாடு,
என் நெஞ்சே, நீ மகா
மகிழ்ச்சியாயிரு.
பார்மாண்ட பிறகு
குழியில் ரட்சகர்
படுத்திருந்தவர்.

2. அப்போதகந்தையாகப்
பேய்க் கூட்டந் துள்ளிற்று.
இப்போதோ திகிலாக
அதிருகிறது. எழுந்த ரட்சகர்
ஜெயம் அடைந்தவர்,
கொடியை ஏற்றினார்;
எதிர்ப்பவர்கள் யார்?

3. மண்மீதில் அவர் நின்று
தெய்வீக மைந்தனாய்
விளங்குவதால் இன்று
பிசாசு பயமாய்
நடுங்குகிறது.
தன் கோட்டைக்குக்கு
இடிப்பும் அழிவும்
வருமென்றுணரும்.

4. இதே என் கண்ணுக்கான
சந்தோஷ வேடிக்கை,
என் மனத்தில் உண்டான
சலிப்பின் பாரத்தை
என் இயேசு நீக்கினார்,
கதி அளிக்கிறார்;
நான் அதைப் பற்றினேன்,
இனிப் பயப்படேன்.

5. பேய் என்மேல் பற்கடித்தும்
வீணதன் கோபமே,
பாதாளம் ஜ்வாலை விட்டும்
அதென்னைச் சேராதே;
இனி நான் சாவுக்கேன்
நடு நடுங்குவேன்,
அதை என் ரட்சகர்
விழுங்கிப் போட்டவர்.

6. என் பேரில் லோகத்தாரும்
சினந்து சீறியும்,
இவ்விறுமாப்பு வாடும்,
இம்மூர்க்கம் ஒழியும்.
என் மேல் உபத்ரவம்
வந்தாலும் பாக்கியம்;
இக்கட்டின் பிறகே
மெய் வாழ்வுண்டாகுமே.

7. உறுப்பு சிரசோடே
எல்லா இடத்திலும்
போகும்போல், கிறிஸ்துவோடே
இக்கட்டு சாவையும்
பாதாளத்தையுமே
பிரிதலின்றியே
நல் நம்பிக்கையுடன்
நான் தாண்டி வாழ்பவன்.

8. உயர்ந்த மகிமைக்குப்
போனார்; பங்காளன் நான்,
யார் என்னை என் தலைக்கு
விலக்கி விடுவான்;
பகைஞர் மிகவும்
வர்மித்துப் போரிட்டும்
அவத்தமாம் யுத்தம்,
அவர் என் கேடகம்.

9. நான் இயேசு கிறிஸ்துவோடே
பாத்தின் வாசலில்
நுழைவேன், அவரோடே
சகித்தோனே இதில்
ப்ரவேசம் பண்ணுவான்.
இவ்வார்த்தை அதில்தான்
பொன்னாம் மொழியைப்போல்
பதிந்த தெய்வச் சொல்.

P. Gerhardt, † 1676.