70. கிறிஸ்துயிர்த்தார். எனக்கும்

1. கிறிஸ்துயிர்த்தார். எனக்கும்
அவரோடு ஜீவன் உண்டு,
அவரோடடியேனும்
மரணத்தினின்றெழுந்து
என்றும் அவர் மகிமை
காண்பேன். இதென் நம்பிக்கை

2. கிறிஸ்துயிர்த்தார். அவரே
சர்வத்தையும் ராஜாவாக
ஆள்வார். என்னையும் அங்கே
தம்மோமாள வைப்பதாக
வாக்களித்தார். சொன்னதைச்
செய்வார். இதென் நம்பிக்கை.

3. கிறிஸ்துயிர்த்தார். அதினால்
தேவ கிருபை தெளிவு,
இதையும் நம்பாமையால்
தேவகனத்துக் கிழிவு.
கிறிஸ்தைப் பற்றும் பாவியைத்
தள்ளார்; இதென் நம்பிக்கை.

4. கிறிஸ்துயிர்த்தார். எனக்கும்
அவர் மீட்புச் சொந்தமாமே.
அடியேனின் ஜீவனும்
அவருக்காதீனமாமே.
அவர் பெலவீனனை
விடார், இதென் நம்பிக்கை.

5. கிறிஸ்துயிர்த்தார். ஈங்கிஷை.
பேய், உயர்வு, தாழ்வு, பாடு
அவர் கையினின்றென்னை
ஒருகாலும் பறிக்காது.
என்னை அவர் வல்ல கை
காக்கும், இதென் நம்பிக்கை.

6. கிறிஸ்துயிர்த்தார். சாவிப்போ
மாளா மோட்ச மகிமையில்
சேரும் வாசல் அல்லவோ.
சாகையில் என் மீட்பர் கையில்
ஒப்புவிப்பேன் ஆவியை,
இயேசுவே என் நம்பிக்கை.

C.F. Gellert, † 1769.