73. ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே

1. ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே,
ஆ, இயேசு லோக மீட்பரே,
நரகத் தீ அடியாரைத்
தொடாதே காரும் உம்மண்டை,
ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே.

2. ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே,
ஆ, பெண்ணின் வித்தாம் இயேசுவே,
சர்ப்பத் தலையைத் தேவரீர்
மா பலமாய் நசுக்கினீர்;
ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே.

3. ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே,
மாசற்ற ஆட்டுக்குட்டியே,
இப் பஷா பலி என்றைக்கும்
பலன்களைக் கொடுக்கவும்,
ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே.

4. ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே,
எங்கள் ப்ரதான குருவே.
நீர் பாவக்குற்றம் யாவையும்
மன்னித்திரக்கமாயிரும்;
ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே.

5. ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே,
அடியார் ஜீவன் உம்மிலே;
உம்மாலே எங்கள் பாவமும்
கொடூர சாவும் நீங்கவும்;
ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே.

6. ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே,
மெய் ஆறுதல் உம்மில் உண்டே,
எழுந்திருந்த உமக்கு
என்றும் துதி உண்மாவது;
ஆ, வெற்றி சிறந்த ஆண்டவரே.

A. Blomstrand