74. இரு சீஷர் ஏக்கங்கொண்டு

1. இரு சீஷர் ஏக்கங்கொண்டு
எம்மாவுக்குப் போகையில்
கண்ணீர்விட்டு, மனம் நொந்து
சென்ற மூன்று நாட்களில்
இயேசுவுக்குச் சம்பவித்து
நேர்ந்தவைகளைக் குறித்துப்
பேச, இயேசு கர்த்தனார்
சேர்ந்து, துக்கம் நீக்கினார்.

2. இவ்வாறின்னும் வெகுவான
பேர்கள் நெஞ்சில் துக்கித்து
தங்களுக்குப் பாரமான
நோவு துன்பம் இக்கட்டு
வந்ததாலே ஏங்குவார்கள்,
பலர் தனித் தழுவார்கள்,
இயேசுவோ அணுகுவார்,
உங்கள் துக்கம் ஏதென்பார்.

3. இரு பேர்கள் கூடி நின்று
போச, அவர் மூன்றாம் ஆள்,
அவர் குறைவை அறிந்து
இன்ப மொழிகளினால்
நன்றாய் ஆற்றித் தேற்றுவாரே,
ஒருகாலும் கைவிடாரே
அவர் உண்மையுள்ளவர்
உத்தம சிநேகிதர்.

4. மரணத்தினின்றெழுந்த
ஜீவனுள்ள மீட்பரே,
ஆ, என்பேரிலும் மிகுந்த
அன்பு கூர்ந்த நேசரே
எனக்காக; ரத்தஞ் சிந்த
வந்தீர்; சிதறித் திரிந்த
என்னைத் தேடித் தோளிலே
தூக்கித் தோழஞ் சேர்த்தீரே.

5. தீங்கில் என்னைக் கைவிடாமல்
துணை நின்றருளினீர்;
தேவரீரை நான் காணாமல்
ஏங்கிச் சேர்ந்தபோது நீர்
என்னைச் சேர்த்தண்டையில் நின்று

6. தேவரீர் இனி என்னோடும்
பக்தர் பாவரோடேயும்
தங்கும் லோகம் பேய் எப்போதும்
எங்களை விரோதித்தும்,
நீர் காப்பாற்றும் நீர் நடத்தம்
விண்ணில் உம்மைப் பார்க்கும் மட்டும்
எம் உள்ளம் நீர்பேசிட
அன்பால் பற்றி எரிய.

Joh. Neünherz, †1737.