1. ஆ, கிறிஸ்துக்கெதிராளியின்
வினையைப் பார்த்து வேதத்தின்
வெளிச்சம் எங்களுடனே
தரிக்கப்பண்ணும், கர்த்தரே.
2. எழுப்பும், தேவ மைந்தனே.
ராஜாதி ராஜா, இயேசுவே;
புகழ்ச்சி உமக்கென்றைக்கும்
வர சபையை ரட்சியும்.
3. தேவாவி, ஓநாய்களையும்
ஆடுகளாக்கியருளும்;
துன்னாளில் எங்கள் நெஞ்சிலே
இரும், தேந்நரவாளனே.
4. த்ரியேகரே, இக்கட்டுக்குக்
கீழாஞ் சபையை ரட்சித்து,
திடனைக் கட்டளையிடும்,
இக்கட்டை நீக்கியருளும்.
5. பகைஞர் யோசனையையே
அவத்தமாக்கும், கர்த்தரே,
படுகுழி பறித்தவர்
குழியில் விழக் கடவர்.
6. அப்போதவர்கள் திகிலாய்
விழித்து, வெட்கப்பட்டோராய்
சபையைக் காக்கிற நீரே
கர்த்தாவென்றறிவார்களே.
1-2 M. Luther. †1546.