94. கர்த்தர்தான் எங்கள் துர்க்கமும்

1.கர்த்தர்தான் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தையும்
பொல்லாங்கனின் சினம்
இப்போ மா விஷம்,
துஷ்டஞ் சூதையும்
அணிந்து உறுமும்,
நிகர் புவியில் இல்லை.

2. எதற்கு நாங்கள் வல்லவர்,
இந்நீசர் சத்தியற்றோர்;
எங்களுக்காய் வேறொருவர்
போர் செய்வதற்கேற்பட்டோர்
யார், இயேசு கிறிஸ்துதான்.
இந்தப் பலவான்
எங்கள் ரட்சகர்,
சேனாபதி அவர்,
ஜெயிப்பர் அவர்தாமே.

3. விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்,
பயப்படோம்; கர்த்தாவினால்
எதிர்த்து நிற்க மாளும்.
இருளின் பிரபு
சீறியும், அது
வெல்லப்பட்ட பேய்,
தள்ளுண்கத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் முறியும்.

4. பகைஞர் தெய்வ வார்த்தையப்
பகைத்தும் அது நிற்கும்
கர்த்தர் சகாயர், அவர் கை
வரந் தந்தாரிக்கும்.
மாற்றான்கள் யாவையும்
ஜீவனைத் தானும்
வாங்கினால், கேடோ;
இராச்சியம் அல்லோ
எங்களுக்கேயிருக்கும்.

M. Luther, † 1546.