97. புவியில் தேவ வார்த்தையும்

1. புவியில் தேவ வார்த்தையும்
எல்லா இடமுமாக
ரட்சிப்பின் சுவிசேஷமும்
பரம்புவதற்காக
கர்த்தா இரங்கி, எங்களை
அன்பாய் ஆசீர்வதித்து,
வனாந்தரமாம் உலகைத்
திருத்தத் தீவிரித்து
குணம் அளிப்பாராக.

2. கர்த்தாவே, பொய் மதங்களை
நீர் ஞாயந்தீர்த் தழித்து,
நரருக்கு மெஞ்ஞானத்தை
நற்சீர்வர அளித்து,
பொல்லாப்பை நீக்கி, திவ்விய
நல்வசனத்தினாலே
ஜனத்தை நீர் மேய்த்தருள;
ஜனமும் பூரிப்பாலே,
கர்த்தாவே, உம்மைப்போற்ற,

3. கர்த்தாவே, உம்மைச் சகல
ஜனங்களும் புகழ,
கர்த்தாவே உமக்கேற்கிற
பலனைப் பூமி தர,
த்ரியேக கர்த்தர் எங்களை
ஆசீர்வதிப்பாராக.
எல்லாத் திரளும் அவரை
தெய்வீகப் பயமாகப்
பணிவதாக, ஆமேன்.

M. Luther, † 1546.