98. மெய் ஒளியான இயேசுவே

1. மெய் ஒளியான இயேசுவே,
இருளிலுள்ளோர் பேரிலே
இரங்கி, அவர்களுக்கும்
வெளிச்சங் கட்டளையிடும்.

2. பொய்ப் போதகத்தால் யாருக்குத்
தப்பாயிருக்கும் நினைவு
உண்டோ, அவர்கள் நெஞ்சிலே
மெய்வரப்பண்ணும் இயேசுவே.

3. காணாமல் போன பாவியை
அன்பாய் நீர் தேடி, அவனைக்
குணப்படுத்தியருளும்,
கெடாதபடி ரட்சியும்.

4. செவியைச் செவிடருக்கும்
ஊமையருக்கு வாயையும்,
நீர்தாரும்; அவர்களுக்கும்
உம்மைத் துதிக்கப் போதியும்.

5. பிரிந்துபோன பேர்களைப்
பார்த்தவர்கள் மயக்கத்தைத்
தெளியப் பண்ணியருளும்,
அந்தகருக்குக் கண் கொடும்.


J. Heermann, † 1647.