1. கர்த்தா, நீர் சொல்வவே,
இருள் அக்கணமே
நீங்கிற்றல்லோ;
அஞ்ஞான இருளை
நீக்க, நீர் கிருபை
கூர்ந்து, வெளிச்சத்தை
அருளீரோ.
2. கிறிஸ்துவே, தயவாய்
லோகவெளிச்சமாய்
வந்த கர்த்தா,
ஆத்தும ரோகமும்
இருளும் நீங்கவும்
அருள் உதிக்கவும்
சேர்ந்தாளுக.
3. நேசத்தின் ஆவியே,
ஜீவ வெளிச்சமே,
வீசிடுமேன்;
குணப்படுத்தவும்
கிறிஸ்தண்டை சேர்க்கவும்
ஜீவனைத் தரவும்
நீர் சேருமேன்.
4. தூய த்ரியேகரே,
நித்திய ஜோதியே,
தீவிரியும்;
ஒளி ப்ரகாசமாய்
தோன்றுக என்பதாய்
குமுறல் சத்தமாய்
கறிபித்திடும்.
J. Marriot, † 1825.