1. நீ ஞானஸ்நானம் பெற்றதால்
நீ கிறிஸ்துவுக்குள்ளான
ஆளானாய் உனக்கதினால்
மா அலங்காரமான
பேர் வந்தது; ஆ, உனக்கு
மா பாக்கியம் என்றெண்ணு.
2. உன்னதமான கர்த்தரை
விலகிப்போவதான
மகா பொல்லாத ஸ்வாபத்தை
நீ உன்னைப் பெற்றதான
உன்தாயின் கர்ப்பத்தில்தானே
உற்பத்தியான நாளிலே
அடைந்தது மெய்யாமே.
3. கர்த்தாவின் சாயல் பாவத்தால்
இல்லாதே போனதாலே
உன் ஸ்பாவம்யாவும் பேயினால்
இப்பாவ விஷத்தாலே
கெடுத்துப் போடப்பட்டது;
பிறந்த நாளில் ஸ்வாமிக்கு
அத்தால் நீ பிள்ளை அல்ல.
4. ஆகையினாலே சாபமும்
கர்த்தாவின் கோபஞ் சாவும்
உன்மேல் சுமந்திருந்ததும்.
அல்லாமல் உன்னில் யாவும்
பிசாசின் வசமானதால்
நீ என்றும் அதன் கட்டினால்
கட்டுண்க மோசமுண்டு.
5. இப்போதும் ஞானஸ்நானத்தில்
கர்த்தாவின் தயவாலே
இக்கேடெல்லாம் மனிதரில்
முறியும்; ஆதாமாலே
கெடுக்கப்பட்டதற்கெல்லாம்
திரும்பவும் நற்சீருண்டாம்;
சூ, ஸ்வாமிக்குப் புகழ்ச்சி.
6. முழுக்க நாம் பெறுகையில்
பாவ அழுக்கு நீங்கும்;
நமக்குப் பேயின் காவலில்
இருந்த கேடுந் தீங்கும்
அகலும்; கர்த்தாவுடைய
பிரிய மைந்தராகிற
கதி நமக்குண்டாகும்.
7. அது தான் மறுஜெனன
முழுக்க, அத்தால் சாவும்
தெய்வீக கோபம் நரக
கெடியுங் கேடும் யாவும்
இல்லாதே போவான்றியே,
கர்த்தாவின் ஆசீர்வாதமே
நமக்கத்தால் உண்டாகும்.
8. இரட்சகரின் நீதியை
நாம் ஞான ஸ்நானத்தாலே
தரிக்கிறோம்; நாம் செய்ததைத்
தமது மீட்பினாலே
அவர் குலைத்து, தமது
இரத்தத்தாலே நமக்குச்
சுத்திகரிப்பை ஈவார்.
9. ஆ, ஞானஸ்நானம் எத்துனை
ஆரோக்கியங் கொடுக்கும்;
இத்தண்ணீர் ஆத்துமங்கனை
எல்லா நிர்ப்பந்த்த்துக்கும்
விலக்கும்; அந்தப் பலமோ
கர்த்தாவின் வார்த்தையால் அல்லோ
அதற்குண்டாயிருக்கும்.
10. அத்தோடே ஆவியானவர்
மிகுந்த தயவாக
நமதுமேல் இறங்குவார்;
மா ஆறுதலுமாக
த்ரியேகரான உன்னத
கர்த்தாவின் நாமம் நமது
முழுக்கிளைத் திடத்தும்.
11. மனிதனே அத்தால் கர்த்தா
மா உபகாரமாக
உன்மேலே வைத்திருக்கிற
பெரிய அன்புக்காக
நீ அவரையே தோத்திரி,
அத்தயவுகளை இனி
மா எண்ணமாக எண்ணு.
12. திருமுழுக்கால் கிறிஸ்துவில்
புதிய சிஷ்டியான
நீ நன்றாய் கிறிஸ்து மார்க்கத்தில்
வளர்ந்து, சுத்தமான
நடக்கையில் நிலத்திரு,
அப்போதுன் கர்த்தர் உனக்குக்
கிரீடத்தைக் கொடுப்பார்.