114. தெய்வீக நீதி யாவுக்கும்

1. தெய்வீக நீதி யாவுக்கும்
சரி செலுத்த வந்த
ரட்சகர் திருமுழுக்கும்
யோர்தானில் பெற்றனந்த
உயிர் உண்டாக்குஞ் சாவுக்கே
அமிழ்ந்தார், நமக்காக
நமக்குப் பங்குண்டாக
திருமுழுக்கமைத்தார்.

2. இப்போதும் ஞானஸ்நானத்தைக்
குறித்துக் கர்த்தர் தாமே
கொடுத்த தெய்வ சாட்சியை
நாம நம்ப ஞாயமாமே;
இது தெய்வீக வசனம்
கூடின தண்ணீர் என்றும்,
தேவாவி என்கிற வரம்
அத்தோ ரூற்றுண்குதென்றம்,
கர்த்தாவின் வார்த்தை சொல்லும்.

3. அந்நாளிலே நடந்ததை
நினைத்துக் கொள்வோமாக;
யோர்தானில் நின்று இயேசு வைப்
பிதா மகா அன்பாகக்
கண்ணோக்கி “இவர் நமது
பிரிய நேசரான
சுதன் என்றாரே; அவ்வாறு
நாமும் இவர்க்குள்ளான
திருமுழுக்கால் ப்ரியர்.

4. புறா ரூபாய்த் தேவாவியார்
நதியில் இயேசு நிற்க,
வந்திவர்மேல் இறங்கினார்;
மூன்றாளும் ஒருமிக்க
நாமும் ஸ்நானம் பெறுகையில்
சமீபமானோரென்றும்,
இத்தாலே நமதுள்ளத்தில்
குணந்தருவாரென்றும்,
நாம் நன்றாய் நம்பலாமே.

5. இரட்சகர் உரைத்த்து:
“போய் நரஜீவனான
எல்லாருக்கும் நம்மண்டைக்குத்
திரும்புவதற்கான
நற்போதகஞ் சொல்லுங்களே,
மெய் விசுவாசமாக
முழுக்குப்பெற்றோர் மீட்பிலே
உள்ளராகி, என்றுஞ் சாகக்
கூடாமல், பிழைப்பார்கள்.

6. ரட்சிப்பின் தெய்வ தயவை
யார் விசுவாசியாமல்
போகிறவன், நல்மோட்சத்தை
அடையவே மாட்டாமல்
கெட்டாக்கினைக் குள்ளாகிறான்
தன் சுய நீதியாலே
வீணாக அவன் உப்பினான்,
ஆகா மரத்தினாலே
கனி ஏதென்றுரைத்தார்.

7. தண்ணீரை மாத்திரம் கண்ணால்
கண்டாலும், விசுவாசம்
அத்தோடே கிறிஸ்தின் ரத்தத்தால்
உண்டென்றம் அறிகிறது.
ஆம் ஞானஸ்நானத்தாலே
ரட்சிப்பு யாவும் நமக்குப்
பலிக்க, ஆவியாலே
நாம் புதுச் சிஷ்டியானோம்.

Martin Luther, † 1546.