1. ஆத்துமாவே உன்னை ஜோடி,
அந்தகாரத்தை விட்டோடி,
ஒளியண்டை வந்து சேரு,
மகிமை அடைந்து தேறு;
உனக்கின்று தயவுள்ள
கர்த்தர் தம்து அன்புள்ள
பந்தியில் புசிக்கத் தந்தார்,
உன்னண்டைக்குத் தங்க வந்தார்.
2. பொக்கிஷங்கனை அளிக்கும்
தயவாக வந்து நிற்கும்
உன் பத்தாவுக் காசையோடு
சீக்கிரம் எதிக்கொண்டோடு,
நெஞ்சின் வாசலைத் திறந்து;
நெசரே, என்னண்டை வந்து
வாசம் பண்ணுமென்று சொல்லு;
அவரைப் பணிந்து கொள்ளு.
3. நற்சரக் குயர்ந்த விலை
பெறும், இதற்கையமில்லை;
ஸ்வாமி, ஈட்டை நீர் பாரீரே
இலவசமாய் ஈவீரே;
லோகமெங்கும் உள்ள நல்ல
பொக்கிஷங்கள் ஈடும் அல்ல;
இந்த மன்னா, இந்த ரத்தம்,
யாவிலும் உயர்ந்த தத்தம்.
4. ஆ, இப்போஜனத்தின் மேலே
வாஞ்சை உண்டிம்மானுவேலே
நீர் சஞ்சீவியாய்க் கொடுக்கும்
ஊணின்மேல் பசியிருக்கும்;
இந்த ஜீவ பானத்தாலே
தாகந் தீர்க்க ஆசையாலே
ஏங்கினேன்; அத்தால் நன்றாக
நான் உம்மோடே ஐகயமாக.
5. நான் சந்தோஷத்தால் நிறைந்தேன்,
நான் நடுக்கமும் அடைந்தேன்
ரண்டும் இப்போதென்னில் உண்டு.
இந்தப் பரம விருந்து
எந்த அற்பிதங்களுக்கும்
மேன்மையான தாயிருக்கும்.
உடதன்பு மெத்த ஆழம்,
சக்தியும் மகா விஸ்தாரம்.
6. லட்சம் பேருக்குக் கொடுக்கும்
இந்த ஊண் குன்றாதிருக்கும்,
ரசத்தோடும் கிறிஸ்தின்ரத்தம்
தானே ஈயப்பட்ட தத்தம்
என்று ஸ்வாபக் கண் காணாது,
நதை புத்திக்குத் கண் காணாது,
தேவ ஆவியால் தெளியும்
கண்ணுக்கே அது தெரியும்.
7. இயேசுவே, மகிழ்ச்சிக்கான
அன்பும் கிருபையுமான
பகலோனே, வான ராஜா,
உண்மையான விசுவாச
பக்தியாய், என் ஆவி தேற,
இந்தப் பந்திக்கு நான் சேரத்
தயைகூரும் என்பதாகக்
கேட்கிறேன்,சாஷ்டாங்கமாக.
8. வான மகிமையை விட்டு,
சிலுவையிலே மரித்து,
உம்முடைய இரத்தம் சிந்த
உம்மில் தீயைப்போல் எரிந்த
அன்பினாலே நான் நிறைய
எனக்கு நீர் உம்முடைய
மாமிசத்தை உண்ணத் தந்தீர்
ரத்தமும் இறைக்க வந்தீர்.
9. ஜீவனின் மெய்யப்பமான
இயேசுவே, ரட்சிப்புக்கான
இந்த பந்திக்கு வீணாக,
அல்லதெனக்குக் கேடாக
நான் சேராமல், இதனாலே
உம்முடைய நேசத்தாலே
நான் நிரம்பி விண்ணிலேயும்
சாப்பிட நீர் தயை செய்யும்.
J. Frank, †1677.