1. என் பாவத்தின் நிவர்த்தியை
உண்டாக்க, அன்பாம் ஜீவனைக்
கொடுத்து, சிலுவையிலே
மரித்த தேவ மைந்தனே.
2. அநேக பாவஞ் செய்தோனாய்
மா ஏழையும் நசலுமாய்
ராப்போஜனத்துக்கு வரும்
அடியேனைத் தள்ளாதேயும்.
3. நீர் பாவியின் இரட்சகர்,
நீர் யாவையும் உடையவர்,
நீர் பரிகாரி, நீர் எல்லாம்,
குணந்தர உம்மாலேயாம்.
4. ஆகையினால், என் இயேசுவே,
குணம் அளியும், என்னிலே
அசுத்தமான யாவையும்
நிவர்த்தியாக்கியருளும்.
5. இருண்ட நெஞ்சில் ஒளியும்
மெய்யான விசுவாசமும்
கொடுத்தென் மாமிசத்தையே
அடங்கப்பண்ணும், கர்த்தரே.
6. நான் உம்மில், வானத்தப்பமே
மகா வணக்கத்துடனே
புசித்தும்மை எக்காலமும்
நினைத்துக் கொண்டிருக்குவும்
7. பொல்லாத துர்க்குணங்களை
அகற்றி என் இதயத்தை
அன்பாலும் பக்கியாலேயும்
நிரப்பி ஜோடித்தருளும்.
8. நல் நாற்றை என்னிலே நடும்,
ஆகாததைப் பேர்த்தருளும்;
என் நெஞ்சில் வந்து, நித்தமே
அதில் நீர் தங்கும், இயேசுவே.
9. நான் இவ்விருத்தின் நன்மையால்
சுத்தாங்கனாய்ப் பிதாவினால்
மன்னிப்பைக் கிருபையையும்
அடைய அருள்புரியும்.
10. என் இயேசுவே, நான் பண்ணின
நல் நிர்ணயம் பலப்பட
பிசாசை ஓட்டியருளும்,
தேவாவி என்னை ஆளவும்.
11. உமக்கே என்னை யாவிலும்
நீர் ஏற்றொனாக்கியருலும்;
தினமும் எனக்கும்மிலே
சுகம் அளியும், கர்த்தரே.
12. நான் சாகும்போதென் ஆவியை
மோட்சானந்தத்தில் உம்மண்டை
சேர்த்தென்னை உம்மால் என்றைக்கும்
திருப்தியாக்கி யருளும்.
J. Heermann, † 1647.