121. கர்த்தர் தம் திருமேனி ரத்தத்தாலே

1. கர்த்தர் தம் திருமேனி ரத்தத்தாலே
நம்மைப் போஷித்த்தினாலே
நாம் அவரை மகாசந்தோஷமாகப்
போற்றித் தோத்திரிப்போமாக.
ஸ்வாமி, இரங்கும்.
கன்னி பெற்ற திருமேனியும்
விலையேறப் பெற்ற ரத்தமும்
நம்மிலே யாவர்க்கும்
நன்மையாய்ப் பலிக்கவும்,.
ஸ்வாமி, இரங்கும்.

2. திருச்சரீரம் சாவுக்கிரையாக
நம்மனைவருக்கும்மாகக்
கொடுக்கப்பட்டதால் இனிப் பிழைப்போம்,
இந்த நேசத்தை நினைப்போம்.
ஸ்வாமி, இரங்கும்.
ஆ, கர்த்தாவே, மா அதிசயம்,
தேவரீர் இறைத்த உதிரம்
கடனைத் தீர்த்தது;
தேவ கோபம் நீங்கிற்று;
ஸ்வாமி, இரங்கும்.

3. கர்த்தாவின் ஆசீர்வாதத்தால் எப்போதும்
மெய்ச்சிநேகம் உண்மையோடும்
நடக்க நம்மனைவருக்குமாக
இந்த ஊண் பலிப்பதாக.
ஸ்வாமி, இரங்கும்.
உமதாவியைத் தந்தருளும்,
இவர் எங்களைக் காப்பாற்றவும்
உமது சபைக்கும்
சமாதானம் அருளும்.
ஸ்வாமி, இரங்கும்.


M. Luther, † 1546.