1. என் இயேசுவே, உம்மாலே
நான் மீட்கப்பட்டதாலே
நான் பூரிப்பால் நிறைந்தேன்,
பேரின்பத்தை அடைந்தேன்.
2. உம்மால் நான் வாழ என்றும்
இப்பந்தியில் நீர் ஈயும்
ஞானத் திரவியங்கள்
பரத்தின் பொக்கிஷங்கள்.
3. இவ்வேழைக்கும் இருக்கும்
பசிக்குந் தாகத்துக்கும்
நீர் பூரிப்பால் நிறைந்தேன்,
பேரின்பத்தை அடைந்தேன்.
4. மா பாடுகளினாலும்
அகோர வாதையாலும்
நீர் என் கடனைத் தீர்த்தீர்,
அத்தால் தான் என்னை மீட்டீர்.
5. மகா கூக்குரலோடும்
இரத்த வேர்வையோடும்
கண்ணீரும்விட்டு, நீரே
என்னை விடுவித்தீரே.
6. என் பாவங்களை மூட
நீரே இத்தோடுங்கூட
மரித்தீர், இதற்காக
துதி உமக்குண்டாக.
7. இத்தயவை ருசிக்கும்
என் ஆத்துமங் களிக்கும்.
இத்தால் என் கேடுந்தீங்கும்.
ஏன் நோவனைத்தும் நீங்கும்.
8. நீர் வானத்தப்பந் தந்த
மிகுதியும் உயர்ந்த
தயையைப் பக்தியாக
நினைத்துக் கொள்வேனாக.
9. ஆ, இன்னும் என்னில் காணும்
பாவங்களை நீர்தானும்
அகற்றிப்போட வாரும்,
ஆ, என்னை ஆண்டு காரும்.
10. வெண் வஸ்திரம் உம்மாலே
எனக்குண்டானதாலே
மா பாக்கியவானானேன்
உம்மோடும் ஐக்யமானேன்.
11. ஆ, நேசரே, உம்மோடே
நான் என்றும் வாஞ்சையோடே
இணைந்து கொண்டோனாக
உம்மில் நிலைப்பேனாக
12. ஜெபத்தில் கருத்தோடும்
நோவில் பொறுமையோடும்
இருந்தெப்போதுமாகப்
பிசாசை வெல்வேனாக.
13. இப்பூமியில் நான் செய்யும்
எவ்வேலைகளிலேயும்
நான் உம்மைப் பூரிப்பாகத்
தினந் துதிப்பேனாக.
14. முடிய நன் கெலித்து
உமக்குள்ளே மரித்து,
எழுந்தானந்தமாக
அங்கும்மால் வாழ்வேனாக.
J. Rist, † 1667.