123. நான் ஞானஸ்நானம்பெற்றதாலே

1. நான் ஞானஸ்நானம்பெற்றதாலே
த்ரியேக ஸ்வாமி உமக்கே
ஆளானேன்; கிறிஸ்துக்குள் அத்தாலே
பொருதவைக்கப்பட்டேனே;
அத்தால் தேவாவியானவர்
எனக்களிக்கப்பட்டவர்.

2. பிதாவே, என்னைப் பிள்ளையாக
அன்பாலே சேர்த்தருளினீர்;
என் இயேசுவே, என் மீட்புக்காக
உமது ரத்தம் சிந்தினீர்,
இக்கட்டுத் துன்ப ராவிலே
நீர் தேற்றுவீர், தேவாவியே.

3. இதற்கும் பிள்ளைப் பக்தியாக
உம்மைப் பணிந்து உமக்கே
கீழ்ப்பட்டடங்கி நற்சீராக
நடக்க வாக்களித்தேனே.
பிசாசின் செயல்களையோ
குலைப்பேன் என்றேன் அல்லலே.

4. கர்த்தாவே, மாறா உண்மையானலே
உடன்படிக்கை காக்கிறீர்;
நானோ என் பலவீனத்தாலே
தவறினால் இரங்குவீர்,
நான் எந்தச் சோதனையிலும்
கெடாப்படிக்கு ரட்சியும்.

5. மீண்டும் என் நெஞ்சைப்பலியாக
உமக்கே ஒப்படைக்கிறேன்
நான் எனக்கல்ல, உமக்காகப்
பிழைக்கத் துணை செய்யுமேன்.
என் தேக ஆவி யாவையும்
உமக்குக் கீழ்ப்படுத்தவும்.

6. போ, சூதும், கபடும் நிறைந்த
இருளின் துஷ்டப்ரபுவே
நான் தெய்வ நீதியை அடைந்த
கர்த்தாவின் நேசப் பிள்ளையே,
போ, லோகமே, உன்னை நாடேன்
நான் இயேசுவைச் சிநேகிப்பேன்.

7. நான் சாகும் வேளை சேரும் மட்டும்
இவ்வாக்கைக் காக்கத்தேவரீர்
துணைபுரிந்தென்னை நடத்தும்
என் பங்கும் என் கதியும் நீர் .
நான் இம்மை மறுமையிலும்
உமக்குச் சொந்தமாகவும்.

Jon. Rambach,  † 1735.