124. கர்த்தாவுக் குண்மையாயிரு

1. கர்த்தாவுக் குண்மையாயிரு,
கிறிஸ்தோனே, நீ அவருக்குக்
கொடுத்த வார்த்தையானது
மெய்யாயிருப்பதற்கு
உன் ஸ்நானத்தைத் தினம் நினை
அவர் மா தயவாக
நேசித்தாரே அவருக்கே
ஆளாயிருப்பாயாக.

2. கர்த்தாவுக் குண்மையாயிரு,
இக்கட்டில் பின் வாங்காதே;
பிதாவின் தயவுனக்கு
இருந்தால்,நீ அஞ்சாதே;
அனைத்திலும் ப்ரதானமும்
கதியுமாயிருக்கும்;
அவர் தயை சத்தோஷத்தைத்
திருப்பவுங் கொடுக்கும்.

3. கர்த்தாவுக் குண்மையாயிரு.
நன்னாளில் உயராதே;
துன்னாளிலே அவருக்குத்
துரோகியாய்ப் போகாதே.
எந்நாளிலும் எந்நேரமும்
படிந்து, ஐயமற்று,
அவர் மெய்வாக்கைப் பற்று.

4. கர்த்தாவுக் குண்மையாயிரு,
உன்மேல் உன் நிலைமையில்
வருஞ் சுமையை நீ எடு;
உன் கர்த்தர் உன்னைக் கையில்
சுமக்கவே, உன்பேரிலே
எக்கேடு வரக்கூடும்.
கர்த்தாவின் கை உன் சிரசை
தன் கேடகத்தால் மூடும்.

5. கர்த்தாவுக் குண்மையாயிரு,
அவரது அன்புள்ள
மொழியை மனிதருக்கு
முன்பாகப் பக்தியுள்ள
மகிழ்ச்சியாய்ப் பகருவாய்.
பூலோகத்தார் இச்சிக்கும்
பொய்ப் பூரிப்புத் தொலைவது
கர்த்தாவின் வார்த்தைநிற்கும்.

6. கர்த்தாவுக் குண்மையாயிரு,
நீ நித்தம் பாவமான
அனைத்தையும் விரோதித்து
அவர்க்கு வெறுப்பான
அஞ்ஞாயத்தை எல்லாம்பகை;
நீ பலவீனமாக
விழுந்தாயேயானால், அன்றே
எழுந்தழுவாயாக.

7. கர்த்தாவுக் குண்மையாயிரு,
நீ காகிற நாள் மட்டும்
ஓய்வின்றியே பரத்துக்கு
நேராய் உன் கால் போகட்டும்
எதிர்க்கிற பயங்கர
எல்லாப் பலங்களுக்கும்
திகையாதே; உன் பேரிலே
கர்த்தாவின் கை இருக்கும்.

8. கர்த்தாவுக் குண்மையாயிரு,
அப்போதவருக்குள்ள
சிநேகம் அவர் உனக்கு
உரைத்த தயவுள்ள
படி எல்லாம் தெரிவதாம்,
அங்குனக்கென்றென்றைக்கும்
சந்தோஷமும் மகிழ்ச்சியும்
ஜெயித்தபின் கிடைக்கும்.

Michael Franck, † 1667.