1. இயேசுவே, உம்மில் நிலைத்து,
உமக் கூழியஞ் செய்வேன்;
என்றும் உமக்கே பிழைத்து,
தேவரீரைப் பின்செல்வேன்;
த்ராட்சைச்செடி தன்னுடைய
சாரங் கொடிக் கூட்டுமே,
இவ்வா றடியேனுடைய
ஜீவன் பலமும் நீரே.
2. ஏழைக் கென்றும் வெகுவான
கிருபை வரங்களை
ஈயும் உம்மிடம் உண்டான
வாழ்வைக்காண்பேன், யாரண்டை
அதிகாரம் யாவும் பெற்ற
தேவரீரிடத்திலே
அடியேனுக்குள்ள மெத்த
நல்ல தாவு வேறெங்கே.
3. இயேசு சுய ரத்தத்தாலே
பாவ சாபத்தினின்றே
என்னைமீட்டார் இவ்வன்பாலே
மீட்கும் ஓர் கர்த்தா எங்கே,
அவரை நான் பதிலாக
நேசிக்காதிருப்பேனோ
சாகும் மட்டும் உண்மையாக
அவரில் நிலைக்கேனோ.
4. இன்ப துன்ப நாள் வந்தாலும்,
இயேசு, உம்மை விடேனே,
இம்மை மறுமைக் கானுலும்
நான் உமக்காதீனமே
தேவரீரில் நான் பிழைக்கும்
பாக்கியத்தைத் தாருமேன்,
அப்போநீர் என்னை அழைக்கும்
போதும்மண்டை சேருவேன்.
5. எனக்கந்திநேரம் வந்து
ஜீவன் போகும் மட்டுக்கும்
இந்தப் பூமியில் அன்றன்று
என்னண்டையில் நின்றிரும்
கண் இருண்டுபோகும்போது
ஆவிக் கொளி வீசுமேன்,
வீடுசேரும் பூரிப்போடு
அப்போ கண்ணை மூடுவேன்.
K.J. Th. Spitta, †1859.