128. மண்ணோடு மண்ணை வைக்கிறோம்

1. மண்ணோடு மண்ணை வைக்கிறோம்;
சந்தேகத்துக் கிடங்கொடோம்
இத்தேகங் கடைசியிலே
கர்த்தாவின் சத்தங்கேட்குமே.

2. ஆதாமின் ஸ்வாபம்கெட்டதால்
மண் மண்ணாய்ப் போயினும் அந்நாள்
எக்கானம் கேட்டு மாட்சியாய்
எழுந்து வாழும் நித்யமாய்.

3. இம்மண்ணை விட்ட ஆத்துமாக்
குமாரனால் தன்னை எல்லா
பொல்லாங்கினிடன்றும் ரட்சித்துக்
கொண்டோரண்டைக்குச் சேர்ந்தது.

4. நெருங்கின இக்கட்டெல்லாம்
களிப்பாய் மாறிப்போனதாம்.
கிறிஸ்துவிலே பிழைத்தவன்
மரித்தும் மரியாதவன்.

5. கதியடைந்த ஆத்துமம்
பின் வைத்துவிட்ட மாமிசம்
சற்றே படுக்கப் போகுமே,
விழிக்கும் நாளும் வருமே.

6. பிறப் பிறப்பு எளிமை,
உயிர்த் தெழுதல் மகிமை.
மாசுற்ற சவம் போயினும்,
மாசற்ற பகல் விடியும்.

7. இப்போதுத்தானதோட்டத்தில்
விதைத்தபின் நாம் போகையில்
இவ்வண்ணமாகச் சாகிறோம்
என்றெண்ணமாகக் கடவோம்.

8. சாவில் சகாயர் ஒருவர்,
பேய் பாவம் சாபம் வென்றவர்
அவர் விலா அடக்கலம்,
அவருக்கென்றுந்தோத்திம்.


V. 1-7 by Weisse
V.8. by Luther 1534.