1. பிதாவாங் கர்த்தர் பேரிலே
ஏக விசுவாசமாக
இருக்கிறோம், எங்களையே
நேசித் தெங்கள் நன்மைக்காக
விண்மண் யாவையுஞ் சிஷ்டித்தார்.
ஆவிதேகத்தையுந்தந்தார்.
ஊண்உடுப்பையும் அளித்தார்,
மிகவும் இரங்கி வந்தார்,
அவர் மகா தயாபரர்,
சருவத்திற்கும் வல்லவர்.
2. ஒன்றான தேவ மைந்தனும்
எங்கள் ஆண்டவருமான
அன்புள்ள இயேசுகிறிஸ்தையும்
நாங்கள் நெஞ்சின் பக்தியான
விசுவாசமாய்த் துதித்து
தோத்திரிக்கிறோம்; தாழ்வான
எங்கள் ஜென்மமாய் ஜென்மித்து
பாடுபட்டிகழ்ச்சியான
மரத்தில் மாண்டு, மூன்றாம் நாள்
உயிர்த்தார் தெய்வ சக்தியால்.
3. தேவாவியானோர் பேரிலும்
நாங்கள் விசுவாசமானோர்
இருவரோடே அவரும்
ஏக தேவ வஸ்துவானோர்.
அவர் ஆளும் மெய்ச்சபையும்,
நீதியரின் ஒருமிப்பும்,
பாவிகளுக்கு மன்னிப்பும்,
செத்தோர் உயிர்த்தெழுதலும்
உண்டே, அனந்த ஜீவனும்.
M. Luther, † 1546.