1. தேவரீரை நான் துதித்துத்
தோத்திரிக்கிறதற்கே
உமதாவியை அளித்து,
பலம் தாரும், கர்த்தரே;
உமதன்பு மட்டில்லாதது
மனோவாக்குக்கும் எட்டாது.
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
2. நித்தம் உமது பலத்தை
உமது தயையையும்
போற்ற என் இருதயத்தை
நீர் எழுப்பியருளும்;
உமதன்பென் பேரில் நீரே
நித்தம் பாயச் செய்கிறீரே
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
3. நான் முன்னாளில் நடப்பித்த
பாவம் யாவும் எனக்கே
நினைவாகையில் துக்கித்த
நெஞ்சு வெடக்ப்படுமே.
ஆ, என்மேல் நீர் தயவாலே
சாந்தமான படியாலே
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
4. என்னை ஜீவனுள்ள நாளும்
என் கர்த்தாவாம் தேவரீர்
எந்தக் காரியம் வந்தாலும்
தயவாய் நடத்தினீர்;
என்னை இப்படி நீர்தாமே
காத்த தாச்சாயிமாமே.
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
5. பாவக்கேட்டை நான் வெறுத்து
எனக்காகத் தமது
சுய ஜீவனைக் கொடுத்து
மாண்ட இயேசுவண்டைக்கு
வர, நீர் இரக்கமாக
என்னை ஏவின தற்காக
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
6. கிருபையுங்குறையற்ற
உண்மையும் நிதானமும்
உமது எல்லாப் பலத்தக்
கிரியைகளாலேயும்,
மாவெளிச்சமாக எங்கும்
யாவர் கண்ணிலும் விளங்கும்,
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
7. உம்மை முழு வாஞ்சையாலும்
அடியேன் பின்பற்றவும்
என் இதயத்தை எந்நாளும்
உமக்கொப்புவிக்கவும்
நயமும் பயமுமாக
என்னை ஏவினதற்காக
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
8. நான் சீர்படத் தக்கதாக
என் பிதாவாந் தேவரீர்
யாவையும் என் நன்மைக்காகச்
செய்து கொண்டிருக்கிறீர்
ஒருவேளை நீர் கொடுப்பீர்,
ஒருவேளை நீர் எடுப்பீர்;
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
9. பள்ளம் மேடுங் காடுமான
எவ்வாழிகளிலும் நீர்
என்னை உமதுண்மையான
காவலால் காப்பாற்றினீர்;
மோசத்தில் ஒத்தாசையாக
வந்தீரென்கிறதற்காக
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
10. ஆ, பிதாவே, என்மேலுள்ள
உமதன்பு பெரிதே;
இயேசுவே, நீர் தயவுள்ள
கண்ணை என்மேல் வைத்தீரே;
தேவ ஆவியே, எப்பாடும்
உமதாறுதலால் மாறும்,
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
11. இந்தமட்டுஞ் சுகமாகக்
காக்கப்பட்ட அடியேன்
தேவரீரை இதற்காகப்
போற்றித் தோத்திரிக்கிறேன்.
இயேசுவே, எனக்கினியும்
நித்திய ரட்சிப்பளியும்.
உமக்காயிரந்தரம்
கர்த்தரே, சங்கீர்த்தனம்.
L.A. Gotter, † 1735.