133. கர்த்தரை, விண் மண் கடல்

1. கர்த்தரை, விண் மண் கடல்
தோத்திரிக்கிற செயல்
உணர்ந்தாத்துமாவே, நீ
கூடவுமே தோத்திரி.

2. விண்ணில் சூரியன் நிலா
இத்தனை நட்சத்திர
சேனையுங் கர்த்தாவுக்கே
சாட்சியாய் விளங்குமே.

3. பூமியின் சிங்காரிப்பு
வெகு நேர்த்தியானது
நாட்டில், காட்டில் கர்த்தரை
நோக்கும் ஜீவன் எத்துணை.

4. கர்த்தரின் புகழ்ச்சிக்குப்
பட்சி பாடுகிறது;
காற்று மாரி, மின்னலும்
எஜமானைச் சேவிக்கும்.

5. மா கடலின் அகலம்
ஆழம் ஓட்டம் மும்முரம்
ஏற்றம் வற்றம் கர்த்தரே,
நீர் பெரியோரென்ருமே.

6. நீர் உண்டாக்கினதெல்லாம்
வெகு ஆச்சரியமாம்,
அதைச் சொல்ல மனிதர்
யாவரும் போதாதவர்.

Joachim Neander,  † 1680.