137. பரத்தின் சேனையாகிய

1. பரத்தின் சேனையாகிய
தூதாட்களை உண்டாக்கின
கர்த்தாவே. உம்மை அதற்காம்
பாட்டாலேபோற்றல் ஞாயமாம்

2. வெளிச்ச தூதராகிய
அவர்களே உம் திவ்விய
முகத்தை நித்தம் பார்ப்பார்கள்
மா சற்குணர், மா ஞானிகள்.

3. அவர்களுக் கும்முடைய
எளிய கூட்டமாகிய
சபையைக் காக்கிறதற்கு
மா கருத்திருக்கின்றது.

4. பழைய சர்ப்பம் மிகவும்
சினத்தால் வர்மத்தாலேயும்
காய்ந்துமது ஜனத்துக்கே
கேடுண்டுபண்ணப் பார்க்குமே

5. நரரை மரணத்துக்கு
உள்ளாக்கின இச்சத்துரு
சபையை வேதத்தை எல்லாம்
நிர்மூலமாக்க ஆசையாம்.

6. விழுங்க ராவும் பகலும்
திரிந்து கொண்டு, எங்கேயும்
கெடுத் தழிக்கிறதற்குக்
கண்ணிகளை வைக்கின்றது.

7. நற்றூதர் சேனையோவென்றால்
தெய்வீக்க் கட்டளையினால்
விழித்து நின்று, அதற்கு
விலக்கமாய்க் காக்கின்றது.

8. லோத் சோதோமின் நெருப்புக்கும்
எலீசா தன்னைச் சுற்றிலும்
சூழ்ந்தோரின் கைக்கும் விலகி
காப்பாற்றப்பட்டதிப்படி.

9. கெபியில் தானியேலையும்
தூதாட்கள் காத்து, மிகவும்
எரிகிற சூளையிலே
மூன்றாளையுங் காத்தார்களே.

10. அநேக தீங்குகளுக்கு
இந்நாள் வரைக்கும் உமது
அன்புள்ள தூதராலே நீர்
அடியாரை விலக்கினீர்.

11. எப்போதும் உம்மை நேர்த்தியாய்
துதிக்குந் தூதருக்கொப்பாய்
அடியார் அனுதினமும்
கர்த்தாவே, உம்மைப் போற்றவும்.

12. ஆ, ஸ்வாமிஇ நீர் இரக்கத்தால்
இப்பரம தூதாட்களால்
சபையை இனி என்றைக்கும்
அன்பாய்க் காப்பாற்றிக்கொண்டிரும்.

Paul Eber, †1569.