136. கர்த்தாவை நித்தம் பார்க்கும்

1. கர்த்தாவை நித்தம் பார்க்கும்
தூதாட்கள் பூமியில்
சிறியரையுங் காக்கும்
துணைகள், ஏனெனில்
குமாரன் மீட்ட யாவும்
சிறியர் ஆத்துமாவும்
கர்த்தாவுக் கருமை.

2. கர்த்தாவால் தங்களுக்குக்
கற்பிக்கப்பட்டதை
அவர்கள் செய்வதற்கு
மின்னல்களைத்தனை
லேசாய் இறங்குவார்கள்,
நற்காவலைக் காப்பார்கள்
இரவும் பகலும்

3. மாற்றான்களின் பலத்த
சதியைத் தாங்களாப்
விலக்க பலமற்ற
கிறிஸ்தோர்கள் வாசமாய்
இருக்கிற அகங்கள்
ராத்தங்கிறத் தலங்கள்
தூதாட்கள் காவல்தான்.

4. தூதாட்கள் தங்கள் நேசர்
என்றாப்ரகாம் ஆகார்
லோத்வீட்டார் எலியேசர்
யாக்கோபும் மற்றுள்ளார்
அநேகரும் நன்றாக
மா ஆறுதலுக்காக
அறிந்து கொண்டவர்.

5. எலீயா தூதனாலே
விசாரிக்கப்பட்டான்;
எலீசா தூதராலே
இக்கட்டில் சூழுண்டான்.
இரட்சகர் பிறந்த
இராவில் மேய்ப்பர் கண்ட
தூதாட்கள் மிகுதி.

6. இப்பிள்ளையை அழிக்க
வருவர் என்பதை
யோசேப்புக் கறிவிக்க
ஓர் தூதன் அவனை
எழுப்பி, துஷ்டனுக்கு
விலகிப் போவதற்கு
வழியைக் காண்பித்தான்.

7. அன்புள்ள தூதர் கையில்
எளிய லாசரு
இறந்த அக்கணத்தில்
மோட்சானந்த்த்திற்கு
எடுத்துப்போகப்பட்ட
நற்செய்தியும் பலத்த
மகிழ்ச்சிக்கானது.

L. Helmbold,  † 1598.